144 தடை உத்தரவு சொல்வது என்ன..? கொரோனா எதிரொலி

கொரோனா வைரஸ்




கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை (24/03/2020) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்ல வரும் விடயங்கள் இந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.

Video Link (YouTube) : ----> https://youtu.be/m2nSCrbiLTM (https://youtu.be/m2nSCrbiLTM)

144 - அரசு அறிவிப்பின் விவரம்*👇

Download Link : ---> Click Here <---


  • நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு.
  • அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் வெளியே வரக்கூடாது - முதல்வர் பழனிசாமி.
  • நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை தடை உத்தரவு - முதல்வர் பழனிசாமி
  • தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415ஆக உயர்வு
  • மாவட்டங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து தவிர மற்றவர்களுக்கு தடை - முதல்வர் பழனிசாமி.
  • பால், காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகள், வணிக வளாகங்களை மூட உத்தரவு.
  • காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படும்.
  • தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சர்.
  • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர்.
  • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். 
  • அவசர அலுவல் பணி தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது - முதல்வர்.
  • விடுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கு வசதியாக உணவகங்கள் செயல்பட அனுமதி - முதல்வர் பழனிசாமி.
  • தனியார் நிறுவனங்கள் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது - முதல்வர் பழனிசாமி.
  • அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்காது - முதல்வர் பழனிசாமி.
  • உணவகங்கள், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - முதல்வர் பழனிசாமி.

No comments